ஒரு தாய் கருவுற்று இருக்கும்போது அவளை நிறைய கவலைகள் சூழ்ந்து விடுகின்றன. சிலவற்றை சொல்லவேண்டும் என்றால் நமக்கு நல்ல அரோகியமுள்ள குழந்தை பிறக்குமா? நான் ஒரு நல்ல தாயாக நடந்து கொள்ள முடியுமா? என் குழந்தயய் நல்லபடியாக வளர்க்க முடியுமா? இந்த மாதிரியான கவலைகள் மிகவும் நார்மல். உங்களக்கும் உங்கள் குழந்தைக்கும் மிகவும் நல்லது நம்பிகயுடநும் தைரியகமகவும் இருப்பதுதான்.
தேவையில்லாமல் கவலைபடுவதும், பயபடுவதும் கர்பகாலத்தில் உங்களடுய உடம்பையும், மனதையும், குழந்தையையும் பாதிக்கும். கற்பமாக இருக்கும் ஒரு தாய்க்கு இதெல்லாம் மிக எளிது அல்ல. ஆனால் இதையெல்லாம் குறைத்து கொண்டு எல்லா விஷயங்களையும் தைரியமாக கையாள வேண்டும். கர்பகாலத்தில் கடுவுளை வேண்டுவதும், அமைதியாக மனதை ஒருமுகபடுதுவுதும் மிகவும் உதவியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கேள்விகளை நம்முடைய கணவரிடமும் , பெற்றோர்களிடமும் ,மருத்தவரிடம் சொல்லி அவர்களுடைய பதிலையையும், ஆறுதலையும் பெறலாம்.
எனக்குகர்ப்ப காலத்திஇல் அரோகியமாக இருக்க முடியும் குழந்தைய பெற்று எடுக்கமுடியும் என்ற முடிவுக்கு வர உங்களக்கு இந்த ஆறு வழிகளும் உதவியாக இருக்கும்.
உங்களக்கு தேவையான உதவிகளை பெறுதல் - எனக்கு சொந்தங்கள் உதவி செய்வதற்கு இல்லை என்ற நிலையில் உள்ளவர்கள் உங்களுடைய கவலைகளை விட்டு நண்பர்களிடம் உங்களக்கு தேவையான உதவிகளை இந்த நேரத்தில் கேட்டு பெறுங்கள். நல்ல நண்பர்கள் இந்த மாதிரி தருணங்களில் கண்டிபாக முன்வந்து உதுவுவர்கள்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஒரு விஷயம் கருவுற்ற காலத்திலும், குழந்தயய் பெற்ற பிறகும் கண்டிப்பாக பெற்றோர்களின் உதவியும், நண்பர்களின் உதவியும் ஒரு மிக பெரிய பலம.
இரண்டாவதாக நீங்கள் ஒரு நல்ல பெற்றோர்ஆக இருக்க முடியும் என்று நம்புங்கள் - என்னால் ஒரு நல்ல தாயாக, வழிகாடியாக இருக்க முடியும் என்று நம்புங்கள். ஒரு தாயாக ஆகபோகிறோம் என்ற பயம் இருந்தால், கவலைபடாமல், நிம்மதியாக இருங்கள். எப்படி ஒரு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்தால், இப்போது படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய அம்மாக்கள் இருகிரர்களே. அவர்கலய்விட சிறந்த ஒரு ஆசிரியர் இருக்க முடியுமா? நிறைய புத்தகங்கள் இருகின்றன, இணையதளங்கள் இருகின்றன. கூச்சபடாமல் உங்களக்கு தேவையான உதவிகளை கேட்டு பெறுங்கள். உங்களை மாதிரி புதிதாக தாய்மார்கள் அக போகிற நண்பர்களிடமும் பேசுங்கள் உங்களக்கு நம்பிக்கை வரும்.
உடல் ரீதியான தடைகளை களைதல் - உங்களக்கு உடல் ரீதியாக எதாவது நோய்கள் இருப்பின் அல்லது நீங்கள் எடை அதிகம் உள்ளவரே இருப்பின் கவலையே விட்டு மருத்தவரிடம் ஆலோசனை பெறுங்கள். கற்ப களத்தில் நன்றாக உடற்பயிற்சி (நடப்பது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது) செய்வது மிகவும் நல்லது. நல்ல ஆரோக்கியமுள்ள உணவை அருந்துவது, சந்தோஷமாக இருப்பது இந்த அனைத்தும் நல்ல அரோக்கியமான குழந்தயய் பெற்று எடுக்க உதவும். மருத்துவரின் ஆலோசனையே பெற்று அதை கடைபிடித்து , நம்பிகையுடன் இருந்தால் இந்த ஒரு உடல் ரீதியான தடைகளையும் களையலாம்.
நீங்களும் உங்கள் அன்பு குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புங்கள் - எந்த ஒரு தாய்க்கும் பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களையும், குழந்தய்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்ற பயம் இருக்கும். உண்மை என்ன வென்றால் நீங்கள் நன்றாக சாப்பிட்டு , உடற்பயிற்சி செய்து, மருத்தவர் சொன்ன மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால் தொண்ணுறு சதவிதம் எந்த ஒரு குறையும் இல்லாமல் உங்கள் குழந்தை பிறகும். கற்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய், மற்றும் பிற நோய்கள் குணப்படுத்த கூடியவைகளே.
குழந்தை வந்தால் என்னால் செலவுகளை சமாளிக்க முடியுமா? இந்த பயமும் எல்லா பெற்றோர்களிடமும் இருக்கும். இந்த பயத்தை விட்டு குழந்தை பிறந்திதிலேருந்தே ஒரு தொகையே அவர்களுடைய படிப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் சேர்த்து வையுங்கள். சரியாக திட்டமிட்டு செலவிடுங்கள். உங்களால் கண்டிப்பாக குழந்தயய் நல்லபடியாக வளர்க்க முடியும்.
உங்களுடைய பிரசவ கால திட்டங்கள் பற்றிய பயம் - நாம் எல்லோரும் சுக பிரசவத்தை விரும்பிகிறோம். ஆனால் சில காரணங்களினால் அறுவை சிகிச்சை தேவை படுகிறது. இது தவிர்க்க முடியாத ஒரு விஷயம். இதை நினைத்து பயபடுவதை விட்டுவிட்டு நம்முடைய குறிக்கோள் ஒரு நல்ல அரோக்கியமான குழந்தை என்பதை மனதில் வைத்து எதற்கும் தயாராக இருக்க வேண்டும். பிரசவத்தின் போது ஏற்படகுடிய வலியய் நினைத்து கவலை கொள்ளாமல் மருத்துவரிடம் வலியய் மறுக்க செய்யும் ஊஸிகலை கேட்டு போட்டு கொள்ளலாம்.
இந்த ஆறு வழிகளும் உங்களக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். படித்து விட்டு உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.